தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாண்புமிகு தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதி 313 ன்படி உரையான சிறப்பு பென்ஷன் ரூபாய் 679 டிஏ வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக அரசு ஏற்று நடத்த வேண்டும், 2023 ஜனவரியில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொங்கல் காரணத் தொகையை வழங்குவதை மறந்து போன ஐசிடிஎஸ் வட்டார நிர்வாகமே உடனே வழங்க வேண்டும், முன்னாள் சமூக நல இயக்குனர் ஆபிரகாம் இ பாப்படி SPF LUMPSUM GPF ஆகிய ஓய்வு காலப் பலன்களை முழுமையாக வழங்க வேண்டும், ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட GPF பெறுவதற்கு மூத்த குடிமக்களை வதைக்காதே.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே அனுமதி வழங்கப்படவில்லை, ஆட்சியர் அலுவலக நுழைவாயில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பின்னர் பேசிய சங்க ஊழியர்கள் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம் எங்கள் கோரிக்கைகளை அரசு செவி சாய்க்கவில்லை பாராளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் எங்களுடைய எதிர்ப்பை வாக்குகள் மூலம் தெரிவிப்போம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஓய்வூயர்கள் உட்ப, 120க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில மாவட்ட தலைவர் கோ. உத்தண்டராமன் தலைமைதாங்க மாவட்ட துணைத்தலைவர்கள் மற்றும் இணைச் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் து.மாரியப்பன் கோரிக்கைகளை விளக்கவுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி தமிழ்நாடு பிற்பட்டோர் நலத்துறை சார்பாக த.இ.டேனியல் தனராஜ், தமிழ்நாடு அங்கன்வாடிப்பணியாளர்கள் சார்பில் எஸ்.அந்தோணியம்மாள், தமிழ்நாடு சத்துணவு சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கனகவேல், மாநில தணிக்கையாள அ.பாக்கியசீலி, பொருளாளர் சண்முக லட்சுமி, தமிழ்நாடு மற்றும் வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் வெ. வேல்குமார் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். மாநில துணைப்பொதுச்செயலாளர் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் பி இராமு நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.