கோவை மாவட்டம் வால்பாறைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சுற்றுலா தலங்களை பார்த்து செல்கின்றனர் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட கூழாங்கல் ஆற்று பகுதி என்பது சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் இடமாக மாறி உள்ளது.
அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் உணவு சாப்பிட்ட பின்பு பிளாஸ்டிக் கழிவுகளை குப்பை தொட்டி அருகே அங்கும் இங்கும் சிதறி போட்டு விடுகிறார்கள் இதனால் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு திரியும் கால்நடைகள் பிளாஸ்டிக் கழிவுகளையும் உண்ணும் அவல நிலை ஏற்பட்டுள்ளது இதனால் கால்நடைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு வயிறு சம்மந்தமான உபாதைகள் மற்றும் நோய்கள் ஏற்பட்டு கால்நடைகளின் உயிருக்கு ஆபத்தாகி விடுகிறது மேலும் உணவுப் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது எனவே
இதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.