நாடு முழுவதும் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிர்நீத்த விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணிசார்பில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய விளை பொருள்களுக்கு கட்டுபடியான விலையை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும், கடந்த 2022 ஆம் ஆண்டு மின்சார மசோதாவை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உத்திரபரதேச மாநிலம் லக்கீம்பூரீல் விவசாயி மீது காரை ஏற்றிக்கொண்ட மத்திய அமைச்சர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,நாடு முழுவதும் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது மத்திய அரசு போட்ட பொய் வழக்குகளை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும்
மேலும் நாடு முழுவதும் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிர் நீத்த 712 விவசாய குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள பாராளுமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்து விவசாயிகள் சங்கம் சார்பாக கோரிக்கை மனுவினை அளிக்க உள்ளனர்.
அதனை முன்னிட்டு இன்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களை நேரில் சந்தித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணிசார்பில்
ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பா.புவிராஜ் முன்னிலையில் விவசாயிகள் கோரிக்கை மனுவினை அளித்தனர். மேலும் இந்த நிகழ்வின்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் ரா.ராகவன், நிர்வாகிகள் ரவிந்திரன்,பிச்சை, தமிழக விவசாயிகள் சங்கம் சரவணமுத்துவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.