கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டியில் இருந்து நான்கு வாலிபர்கள் (27/08/2023) ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாவிற்காக ஆனைமலை சென்று கொண்டிருந்த பொழுது ஆனைமலை செல்லும் வழியில் உள்ள அம்பராம்பாளையம் ஆழியாற்றில் குளிப்பதற்காக இறங்கி நான்கு வாலிபர்களும் குளித்துக் கொண்டிருந்தபோது அதில் உள்ள ஒரு இளைஞர் சுமார் 22 வயதுடைய கார்த்திகேயன் என்ற இளைஞர் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றதால் நீரில் மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது.
இத்தகவலை அறிந்து வந்த பொள்ளாச்சி தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் மாயமான இளைஞரை சுமார் 4 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர் இந்த நிலையில் இரவு 7 மணி வரை தேடிய நிலையில் இரவு நேரம் ஆனதால் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர் மீண்டும்இன்று தேடுதல் பணியை தொடங்கிய
பின் காலை சுமார் ஆறு மணி அளவில் மூழ்கிய உடலை கைப்பற்றினர் கைப்பற்றிய சடலத்தை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.