கோவை போத்தனூர் ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி என்பவரின் மகன் 46 வயதான வேங்கட ரமணி, இவர் கோவை அரசு ஐடிஐயில் உதவி பயிற்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது தாயார் வீடு அதே பகுதியில் அமைந்துள்ளது. இவரது தாயார் கடந்த மாதத்தில் வீட்டை பூட்டி விட்டு உறவினர்களை பார்ப்பதற்காக அமெரிக்கா சென்று விட்டார், வேங்கட ரமணி அடிக்கடி தனது அம்மா வீட்டுக்கு சென்று வீட்டை பராமரித்து விட்டு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று தனது அம்மா வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைந்த நிலையில் இருந்தது, பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ஐந்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளி டம்ளர்கள் திருட்டு போயிருந்தது. தொடர்ந்து வேங்கட ரமணி போத்தனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.