கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதி கொச்சின் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டத்தில் கேப் ரோடு என்ற இடத்தில் பாறைகள் சரியாக திட்டமிடாமல் உடைக்கப்பட்டதால் பாறைகள் உடைந்து சிதறப்பட்ட விவசாய நிலங்களில் விவசாயம் அழிந்தது.
எனவே ஒப்பந்ததாரர்களிடம் விவசாயிகள் தங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட போதிலும் சாலை விரிவாக்க பணி முடிந்தும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எந்த நஷ்ட ஈடும் கொடுக்கப்படவில்லை எனவே விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து 87 நாட்களாக சாலையில் குடிசை அமைத்து போராட்டம் நடத்தியும் எந்த பலனும் இல்லை. இதற்கிடையே உதவி மாவட்ட ஆட்சியர் ஜூலை 10ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 10 நாட்களுக்குள் நஷ்ட ஈடு பணத்தை ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெறப்பட்டு தரப்படும் என கொடுத்த வாக்குறுதி இப்போது வரையிலும் நிறைவேற்றப்படவில்லை.
எனவே இன்று தேவிகுளம் போக்குவரத்து துறை அலுவலகத்தை முற்றுகையிட தீர்மானித்து இன்று முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. இதில் தலைமை இதை ஐ என் டி யூ சி சட்டமன்ற செயலாளர் டி.குமார் துவக்கி வைக்கிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்