தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் டிஎம்பி மெக்கவாய் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே போட்டிகள் நேற்று முன்தினம் கிங்ஸ் இன்டர்நேஷனல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்றது.
ஒட்டப்பிடாரம் அருகில் டிஎம்பி மெக்கவாய் ஆரம்பப்பள்ளியில் கராத்தேப் பட்டைதரத் தேர்வு சர்வ தேசத்தரத்தில் சோட்டகான கராத்தே டு இண்டர்நேஷனல் ஆசோஸியேசன் இந்தியாவின் தேசிய இணைச்செயலாளர் சிகான் M அகமது மரைக்கான் அவர்களால் நடத்தப்பட்டது. இத்தேர்வில் குறுக்குச்சாலை டிஎம்பி மெக்கவாய் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏகலைவன் கலைகுழு மாணவர்கள் என 47 பேர் பங்கேற்றனர்.
இதில் வெற்றிப் பெற்ற வீரர் வீராங்கனைகளை டிஎம்பி மெக்கவாய் ஆரம்ப மற்றும் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி K.ஜேம்ஸ்பாஸ்கர் மற்றும் டிஎம்பி மெக்கவாய் ஆரம்பபள்ளி தலைமை ஆசிரியர்S. கமலக்கண்ணன் , டிஎம்பி மெக்கவாய் கிராமிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்,
நல்லாசிரியர் திருமதி G.வனஜா மங்களச்செல்வி ஆகியோர் வெற்றிப்பெற்றவீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கினர். இதில் சிறப்பு விருந்தினராக ஏ கலைவன் கலைக்குழு பயிற்சி ஆசான் அருண் குமார் கலந்து கொண்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.