தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் என் மண் என் மக்கள் நிகழ்ச்சியின் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்று மாலை 5 மணி அளவில் ஓட்டப்பிடாரத்திற்கு வருகை தந்த அண்ணாமலைக்கு அவர்களுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது, பின்னர் இங்கு கூடியிருந்த நிர்வாகிகள் பொதுமக்கள் சந்தித்தார்.
ஓட்டப்பிடாரம் மெயின் பஜாரில் அலங்கரிக்கப்பட்ட சுந்தரலிங்கம் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நடைபயணமாக வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த வீட்டிற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார், அங்கு அவரின் வரலாற்று காவியங்களை புகைப்படங்களை பார்வையிட்டார். அங்கிருந்து தொடர் நடைபயணம் 3 கிலோமீட்டர் வரை முப்புலிவெட்டி கிராமத்தை சென்றடைந்து, அங்கு நிறுவப்பட்டிருந்த மாமள்ளர் தேவ ஆசீர்வாதம் அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார், பின்னர் மருத்துவ முகாம், நூலகத்தை பார்வையிட்டார்.
புதியம்புத்தூர் மேலமடத்தில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து விட்டு புதியம்புத்தூர் மெயின் பஜாரில் திறந்த வேனில் சிறப்புரையாற்றினார்:
அண்ணாமலை அவர்கள் பேசியது:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சுந்தரப் போராட்ட தியாகிகள் வாழ்ந்த மண் இந்த மண்ணிற்கு வருவதில் மிகவும் பெருமை கொள்கிறேன். புதியம்புத்தூர் ஜவுளி தொழிலில் மிகவும் சிறந்த விளங்கும் பகுதியாகும் விரைவில் புதிய ஜவுளி ஆடை தொழிற் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் அனைவருக்கும் வீடு திட்டம் பிரதம மந்திரி பி எம் கிஷான் திட்டம் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தார்.
திமுகவும் திமுக அமைச்சர்கள் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்தார்:
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் ஐந்தாண்டுகளில் 3,50,000 வேலை வாய்ப்புகள் தருவதாக சொன்னார்கள் ஆனால் இன்று வரை 28 மாதங்கள் ஆகிவிட்டது, ஒரு வேலை வாய்ப்பு கூட தரவில்லை, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் காற்றாலை நிறுவனங்களில் இருந்து கமிஷன் வாங்குவது குறியாக உள்ளார் . மத்திய அரசின் ரேஷன் அரிசியில் 98 சதவீதம் மானியம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. நாங்குநேரி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஜாதியை ஒழித்திட்டம் என திமுகவினர் சொல்கிறார்கள் திருநெல்வேலியில் நாங்குநேரியில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது, திமுக ஜாதி இன்னொன்று மொழி இத வைத்து அரசியல் செய்து வருகிறது என கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த வரவேற்பு நிகழ்வின் போது மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன், மாவட்ட பார்வையாளர் போத்தீஸ் ராமமூர்த்தி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற எண் மண் என் மக்கள் நிகழ்ச்சி பொறுப்பாளர் மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர் குமார் , இணை பொறுப்பாளர் வக்கீல் செந்தில்குமார் என்ற பிரபு, மாவட்டத் துணை தலைவர்கள் ஹேமா மாலினி, முத்துமாரி அறிவழகன், மங்கள ரோஸ் , ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தலைவர் PMM சரவணன், மாவட்டம் செயலாளர் லிங்கராஜ், தகவல் தொழில்நுட்பக் பிரிவு நாகராஜன், விவசாய அணி மாவட்ட திட்ட பொறுப்பாளர் செல்வின் சவான், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் முத்தமிழ்செல்வன், பெரியநத்தம் கருப்புசாமி, விவசாய அணி முனியசாமி, கல்வியாளர் பிரிவு கோவில் பிள்ளை, இளைஞர் அணி செயலாளர் மந்திர மூர்த்தி , கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளர் தங்கவேல், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் வசந்த், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு வரவேற்பு அளித்தார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.