கோவை என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியில் ராக்கிங் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினரும், நீதிபதியுமான அ. முகமது ஜியாவுதீன் பேசினார்.
ராக்கிங்கில் மூத்த மாணவர் ஈடுபட்டார் என்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர், கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படுவார். முதலில் புகார் வந்ததும் இடைநீக்கம் செய்யப்படுவார். உறுதிப்படுத்தப்பட்டால் கல்லூரியை விட்டு நீக்கி விடுவார்கள். மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்ட னையும், ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தண்டிக்கப்பட்ட மாணவர் எந்த கல்லூரியிலும் அதன் பிறகு சேர முடியாது.
அரசு வேலைக்கோ அல்லது தனியார் வேலைக்கோ செல்ல முடியாது. இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் என்பதால் அவர்களால் பாஸ் போர்ட் எடுத்து வெளிநாட்டுக்கு செல்ல முடியாது. இவ்வளவு கொடுமையான ராக்கிங் பழக்கத்தில் இருந்து முற்றிலுமாக மாணவர்கள் தங்களை தடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.