கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றித்திரிகிறது. காட்டு யானைகளின் இயல்புக்கு மாறாக இந்த யானை பல ஆண்டுகளாக இடம் பெயராமலும் பிற யானைகளோடு இணையாமலும் தன்னந்தனியே மேட்டுப்பாளையம் பகுதியில் முகாமிட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு காட்டை விட்டு வெளியேறிய பாகுபலி யானை மேட்டுப்பாளையம்-
கோத்தகிரி சாலையை கடந்து அங்கிருந்த அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அருகே சென்றுள்ளது. அப்போது கல்லூரி வளாகத்தினுள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த யானை உருவ பொம்மையை பார்த்த பாகுபலி, அதனை நிஜ யானை என நம்பி ஆவேசத்துடன் பிளிறி விரட்ட முயன்றுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இருளில் யானை உருவம் அசையாமல் நிற்பதை கண்ட பாகுபலி, மிகுந்த கோபத்துடன் கல்லூரியின் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று யானை பொம்மையை தாக்க துவங்கியுள்ளது. நிஜ யானையின் ஆவேச தாக்குதல் காரணமாக பொம்மை யானை கீழே சாய்ந்த பின்னர் கோபம் தணிந்த பாகுபலி கல்லூரியை விட்டு வெளியேறியுள்ளது. உண்மையான யானை நிற்பது போன்ற தத்ரூபமாக இருந்த யானை பொம்மையை உண்மையான யானை என்றும் தன் எல்லைக்குள் புதிய யானை வந்துள்ளதாகவும்
கருதி சுவரை உடைத்து உள்ளே சென்று தாக்குதல் நடத்தி விட்டு சென்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இரு முறை கும்கி யானைகளை வரவழைத்து பாகுபலி யானையை பிடிக்க வனத்துறை முயற்சித்த காரணத்தால் தன்னை பிடிக்க வந்த கும்கி யானையாக பொம்மை யானையினை பாகுபலி நினைத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே அரசு மரக்கிடங்கில் வேழம் யானைகள் பூங்கா அமைக்கும் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த ஐந்திற்கும் மேற்பட்ட யானை பொம்மைகளை பாகுபலி யானை இதே போல் தாக்கி சேதப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.