தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட தந்தை பெரியார் நகரில் சுமார் 350 க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் 150 வீடுகளுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் வீட்டு தீர்வை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற குடியிருப்புகளுக்கு இதுவரை வீட்டு ரசீது வழங்கப்படவில்லை. இது குறித்து பல முறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன் முழக்கங்கள் எழுப்பப்பட்டது, பின்னர் ஒன்றிய அலுவலகத்திற்குள் அடுப்பு, சமையல் பாத்திரங்கள், விறகு என அனைத்து பொருட்களுடன் பாதிக்கப்பட்ட மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் அனுமதிக்க மறுத்தனர்.
வீட்டு தீர்வை வழங்காத அதிகாரிகளை கண்டித்து, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
வீட்டு தீர்வை தரவில்லை என்பதால் மின் இணைப்பு பெற முடியாமல் பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பள்ளி கல்லூரி செல்லும் மாணவ – மாணவிகள் கல்வி பயில முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வீட்டு தீர்வை போட தாமதித்து வரும் அலுவலர்களை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் P பரமராஜ் CPI மாவட்ட குழு, S சுரேஷ்குமார் CPI தாலுகா உதவி செயலாளர், G சேதுராமலிங்கம் CPI நிர்வாக குழு, D முனியசாமி CPI நகர துணை செயலாளர், A ரஞ்சனி கண்ணம்மா CPI மாவட்ட குழு, G அலாவுதீன் CPI நகர துணை செயலாளர், R ரெங்கநாதன் CPI தாலுகா குழு, V K பரமசிவம், R பிரபாகரன், மற்றும் தந்தை பெரியார் நகர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.