இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் சங்கம் (எய்ம்ஸ்), கோவை, நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி.,ஐ டெக் கருத்தரங்கு மையத்தில் ஆகஸ்ட் 24 முதல் 26 வரை 34வது மேலாண்மை கல்வி கருத்தரங்கை நடத்துகிறது. “புதிய மாற்றத்துக்கான மேலாண்மை கல்வியின் பயன்பாடு” என்ற தலைப்பில் இந்த பதிப்பு நடக்கிறது.பொள்ளாச்சி, ஸ்ரீசரஸ்வதி தியாகராஜா கல்லுாரியின் இயக்குனரும், எய்ம்ஸ் தலைவருமான டாக்டர் ஆர்.நந்தகோபால் துவக்க விழாவில் அனைவரையும் வரவேற்றார். முதல்முறையாக கோவையில் இந்தமாநாடு நடக்கிறது என அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு மாநாடு, வணிக கல்வி நிறுவனங்களின் டீன்கள், இயக்குனர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்துறையில் முன்னணி தலைவர்களுக்கு ஒரு தளமாக இருக்கும். கற்பித்தல், கற்போர், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் ஆகியோருக்கு மேலாண்மை குறித்த உள்ளார்ந்த பார்வையை ஒரே கூரையின் கீழ் வழங்குவதாக இருக்கும். பெங்களுரு இந்திய மேலாண்மை சங்கத்தின் முன்னாள் இயக்குனர் பேராசிரியர் ஜே பிலிப், துவக்க உரையாற்றினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் பேராசிரியர் டி.ஜி சீதாராம் மாநாட்டினை துவக்கி வைத்து பேசினார். மாநாட்டின் இயக்குனர் டாக்டர் வி.ஸ்ரீவித்யா பேசுகையில், “பி.எஸ்.ஜி.,மேலாண்மை கல்வி நிறுவனம், தென்னிந்திய அளவில் இந்த நிகழ்ச்சியை இணைந்து நடத்துவதில் பெருமையடைகிறது,” என்றார். பிஸினஸ் ஸ்டேண்டார்டு இதழின் ஆசிரியர் குழு இயக்குனர் திரு. ஏ.கே பட்டார்ச்சார்யா, நிகழ்ச்சியில் உரையற்றினார்.
மாநாட்டின் முன்னோட்டமாக இரண்டு கருத்தரங்குகள் நடந்தன.
முதலாவது, சர்வதேச அங்கீகாரம் குறித்த ஒரு பார்வை என்ற தலைப்பில், சீஇஏஏ டிரஸ்ட் தலைவர் திரு. ஏ. தோத்தரி ராமன், ஆசிய இஎப்எம்டிகுளோபல் நெட்வொர்க் சிறப்பு ஆலோசகர் திரு. நிஷித் ஜெயின், அமெரிக்காவின் மேலாண்மை மற்றும் மனித வள வால்டன் பல்கலைக் கழக கல்லுாரியின் டாக்டர் டக்ளஸ் கில்பர்ட், பவன்ஸ் கம்யுனிகேஷன் அன்ட் மேனேஜ்மென்ட் மையத்தின் கல்வி வளர்ச்சி மேம்பாட்டு இயக்குனரும் முன்னாள் தலைவருமான டாக்டர் சுஜாதா மங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டின்போது, தேசிய அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்றனர்.
-சீனி, போத்தனூர்.