கோவையில் புகழ்பெற்ற சுகுணா நிறுவனங்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம். கோவை காளப்பட்டியில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. நூற்றாண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சுட்டூர், ஸ்ரீ சேக்ஷ்த்ரா ஸ்ரீ வீரசிம்மாசன மகா சமஸ்தான மடம், ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்த்ர மகா சுவாமிஜி அவர்கள் தலைமை வகித்தார்.
கௌரவ விருந்தினராக கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் முனைவர் பி கே கிருஷ்ணராஜ் வானவராயர் கலந்து கொண்டார். விழாவில் சுகுணா நிறுவனங்களின் தலைவர் லக்ஷ்மி நாராயணசாமி வரவேற்று பேசும் போது ஜி ஆர் என்ற இரண்டு எழுத்து மந்திரம் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம், தேசத்துக்கு அவர் செய்தவை தாராளம்.
ஜி ஆர் என பாசத்தோடும் மரியாதையோடும் அழைக்கப்படும் அந்த மாமனிதர் ஜி ராமசாமி நாயுடு, மண் வயல் முதல், விண்வெளி வரை தொழில்துறையில் சாதித்திருப்பதற்கு, கல்விச்சாலைகள் நிறைந்த பெருநகரமாக உருவடுப்பதற்கும் இவரின் பங்களிப்பை யாராலும் மறந்து விடவோ, மறுத்து விடவோ முடியாது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுகுணா குழுமம் என்ற மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவிய ஆளுமை ஜி ராமசாமி நாயுடு ஆவார். நாடு உனக்கு என்ன செய்தது என கேட்காதே, நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என யோசி என்ற வாசகம் ஜி ராம் ஜி ராமசாமி நாயுடு அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது. அதிகபட்ச தனி நபர் வருமான வரியை செலுத்தியமைக்காக தொடர்ந்து ஐந்தாண்டுகள் “ராஷ்ட்ரிய சம்மான்” விருது பெற்றவர்.
வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாதிருக்கட்டும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம். சாமானியர்கள் முதல் நாட்டை ஆண்ட பிரதமர், முதல்வர்கள் வரை அனைவரிடமும் எளிமையாக பழகும் குணம் கொண்டவர். கல்வியும் தொழிலும் தேசத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும் என கண்டறிந்து அதற்கு வித்திட்ட தீர்க்கதரிசி.
விழாவில் சுகுணா குழுமங்களின் நிர்வாக இயக்குனர் திருமதி. சுகுணா, குழுமத்தின் நிர்வாக மேலாளர்கள்; அனீஸ்குமார், அர்ச்சனா அருண், சுகுணா கல்வி குழுமங்களின் முதல்வர்கள், தொழிற்சாலை மேலாளர்கள், அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டார்கள்.
-சீனி, போத்தனூர்.