திருப்பத்தூர் கோட்டத்துக்குட்பட்ட சிங்கம்புணரி மற்றும் அ.காளாப்பூர் துணை மின் நிலையங்களில் நாளை சனிக்கிழமையன்று (19-08-2023) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, சிங்கம்புணரி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படும் முக்கிய ஊர்களான சிங்கம்புணரி நகர், கிருங்காக்கோட்டை, அணைக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, கோட்டை வேங்கைப்பட்டி, செருதப்பட்டி மற்றும் என்ஃபீல்டு பகுதிகளிலும், அ.காளாப்பூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் செய்யப்படும் முக்கிய ஊர்களான அ.காளாப்பூர்,
எஸ்.வி.மங்கலம், பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிபட்டி, செல்லியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சனிக்கிழமையன்று (19-08-2023) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருப்பத்தூர் கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.