போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவிக்கும் பேருந்து நிறுத்தம்!!
விபத்து அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!!!
கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் அபிநந்த் மருத்துவமனை எதிரில் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது இங்கிருந்து பொள்ளாச்சி மற்றும் பொள்ளாச்சி வழியாக மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் கிணத்துக்கடவு, ஒத்தக்கால் மண்டபம், மலுமிச்சம்பட்டி போன்ற பகுதிகளுக்கு செல்லும் புறநகர் பேருந்துகளும் இந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்று செல்கின்றன இங்கு பேருந்தில் ஏறுவதற்காக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருக்கின்றனர் இதனால் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் குஞ்சு மைதீன் அவர்கள் கூறுகையில்:-
இந்த பேருந்து நிறுத்தமானது போத்தனூரில் இருந்து சாரதா மில் ரோடு வழியாக பொள்ளாச்சி சாலையை சந்திக்கும் இடமாகவும் பொள்ளாச்சி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் போத்தனூர் செல்ல பிரிந்து செல்லும் இடமாகவும் அமைந்துள்ளது. சாரதா மில் ரோடு பிரிவு சாலையில் இதற்கு முன் மைய தடுப்பு சுவர் இருந்தது ஆனால் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கழிவுநீர் கால்வாய்க்கான பாலம் கட்டும் வேலையின் காரணமாக அது அகற்றப்பட்டு வேலை நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தற்பொழுது பாலம் கட்டி முடிக்கப்பட்டு சாலையும் போடப்பட்டுள்ளது. ஆனால் மைய தடுப்பு சுவர் இல்லை இதன் காரணமாக பொள்ளாச்சி சாலையில் இருந்து சாரதா மில் ரோடு வழியாக செல்லும் வாகனங்களும் போத்தனூர் பகுதியில் இருந்து சாரதா மில் ரோடு வழியாக வரும் வாகனங்களும் ஒரு ஒழுங்கு முறையின்றி திரும்புகின்றன இது ஒரு புறம் இருக்க சுந்தராபுரம் சந்திப்பில் இருந்து பொள்ளாச்சி வழியாக செல்லும் பேருந்துகள் அபிநந்த் மருத்துவமனை எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றும்பொழுது பின்னால் வரும் வாகனங்கள் அப்படியே ஸ்தம்பித்து நின்று விடுகின்றன இது போன்ற சூழ்நிலைகளில் கிடைக்கும் சிறிய இடைவெளியை பயன்படுத்தி இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களுக்கு இடையே சாலையை கடக்க முயல்கின்றனர்,
பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து புறப்பட்டதும் சாலையை கடந்து கொண்டிருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பேருந்தின் பின்னால் வந்த வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவது உடன் விபத்து ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன மேலும் சாரதா மில் ரோடு சாலையில் மையத்தடுப்பு சுவர் இல்லாத காரணத்தால் பொள்ளாச்சி சாலையில் இருந்து திரும்பும் வாகனங்களும் சாரதா மில் ரோடு பகுதியில் இருந்து வரும் வாகனங்களும் ஒழுங்கற்ற முறையில் வருவதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது எனவே இந்த பேருந்து நிறுத்தத்தை மாற்றி அமைக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கலாமா என யோசனை செய்து பெரும் விபத்து ஏதும் நடப்பதற்கு முன்னாள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது என்று கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.