13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.
இதுவரையில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து தான் உலகக் கோப்பை தொடரை நடத்தியுள்ளது. ஆனால் முதல் முறையாக இந்தியா தனியாக உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனையொட்டி உலகக்கோப்பை சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது, அதன்படி உலகக்கோப்பை சுற்றுப்பயணத்தில் பல்வேறு நாடுகளின் முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மக்கள் பார்வைக்கு கோப்பை காட்சிப்படுத்தப்பட்டது.
அதன்பிறகு, உலகக் கோப்பை இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது, அது தற்போது இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமான தாஜ்மஹால் வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
-அருண்குமார், கிணத்துக்கடவு.