உலகப் புகழ் பெற்ற தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தின் 441-ம் ஆண்டு திருவிழா மற்றும் 16-வது தங்கத்தேர் திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தங்கதேர் திருப்பலியை கோவா உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் பிலிப் நேரி நடத்தினர். அதுபோல் தங்கத்தேர் பவனியை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ், இலங்கை மன்னார் பிஷப் இம்மானுவேல் பர்னான்டோ ஆகியோர் ஜெபம் செய்து தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து முக்கிய வீதிகளில் மதியம் 12.30 மணிக்கு தங்கத் தேர் நன்றி திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு 82-வது நிகழ்ச்சியாக பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூய பனிமயமாதா பேராலயத்தின் தங்கத்ரோரோட்ட திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவிழாவில் அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார், உள்பட இறைமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர். தங்கத் தோ் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் கூடியுள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் சுமார் 2000 போலீஸார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.