தேசிய தலைவர் பிறந்த நாள் முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் உணவு வழங்கல்!! கோவை, ஆக.7: தேசிய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தேசிய தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை சார்பில் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது.
இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை துறையின் தேசிய தலைவர் இம்ரான் பிரதாப் கரி எம்.பி பிறந்தநாள் விழா ஜீவசக்தி ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சி கோவை தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் எம்.முகம்மது ஹாரூன் தலைமையில் நடைபெற்றது.
ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பகவதி, முகமது இஸ்மாயில், வி.சி. முருகன், மணி, இர்பான், பாலு கண்ணன், சந்திரமோகன், பாபு, சுரேஷ்குமார், முகமது ஈஷா, தனபால், விஷ்ணு, அருள்தாஸ், இப்ராஹிம், ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு விருந்து மற்றும் இனிப்பு பலகாரங்களை கொடுத்து விழாவை முடித்து வைத்தனர். இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது ஹாரூன் தலைமையில் உணவு வழங்கப்பட்டது.