தூத்துக்குடி மாவட்ட தலைநகரில் இன்று மாலை 3 மணி அளவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முதலில் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பப்பட்டது பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம் அரசு எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் எங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் அனைத்து ஊழியர்களும் எங்களது எதிர்ப்பை வாக்குகள் மூலம் தெரிவிப்போம்.
போராட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை ஊழியர் மூலமாகவே செயல்படுத்த வேண்டும், மாநிலம் முழுவதும் சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள ஆயிரக்கணக்கான காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனே உடனே ஏற்பட வேண்டும், தேர்தலுக்கான வாக்குறுதியான காலைமுறை ஊதியம் குறைந்தபட்ச ஓய்வூதியம் 6750+DA யுடன் வழங்கிட பட பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாண்டியன் மாவட்ட தலைவர் , பாக்கியசீலி மாநில தணிக்கையாளர், கண்ணன் தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர், கனகவேல் மாவட்ட துணைத் தலைவர் சண்முக லட்சுமி மாவட்ட பொருளாளர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.