கோவை மாவட்டம் வால்பாறை தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் மிகவும் அதிக அளவில் வருமானம் ஈட்டித் தரக்கூடிய வால்பாறை நகராட்சியானது தற்போது வன சரகத்தினால் நாளுக்கு நாள் நலிவடைந்த நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றது. தேயிலைத் தோட்ட தொழிலையும் நலிவடையச் செய்து தோட்ட தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தோட்ட தொழிலை விட்டே வெளியேறி விட்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் வேறு இடத்திலிருந்து வனவிலங்குகளை கொண்டு வந்து மக்களுக்கு மரண பயத்தை காட்டும் வகையில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இது மட்டும் இல்லாமல் சுற்றுலா வரும் பயணிகளை நம்பி தொழில் செய்து கொண்டிருக்கும் அனைத்து தரப்பு வியாபாரிகளுக்கும் தொந்தரவு செய்யும் வகையில் கட்டணம் வசூல் செய்து கொண்டு சுற்றுலாப் பயணிகளின் பார்வை இடங்களையும் முடக்குவதும் சுற்றுலா பயணிகளை 6 மணிக்கு மேல் திருப்பி அனுப்ப வேண்டும் என்று தீர்மானம் செய்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
மேலும் வன சரகம் இந்த சர்வதிகாரப் போக்கை கண்டிப்பாக மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும் தவறும் பட்சத்தில் அமைப்பு ரீதியாக தமிழக வணிகர் சம்மேளனம் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டியது வரும் என தமிழக வணிகர் சம்மேளனம் அமைப்பின் தொகுதி செயலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
-P.பரமசிவம் வால்பாறை.