கோவை மாவட்டம் வால்பாறை அஞ்சல் துறை அலுவலகம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிழற்குடை கட்டிடம் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் ஆகியோர் வெய்யலில் காத்திருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மேலும் மழைக்காலங்களில் மழையில் நனைந்தபடி காத்திருக்க வேண்டி உள்ளது.
இந்த பேருந்து நிறுத்த பகுதியில் பேருந்து நிழல் குடை கட்டிடம் கட்ட ஏற்கனவே பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினார்கள் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்
இந்த பேருந்து நிறுத்தமானது அஞ்சலக அலுவலகத்திற்கு அருகிலும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அருகிலும் உள்ளது மேலும் அரசு மருத்துவமனை, காவல் நிலையம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகியவற்றிற்கு செல்வதற்கான பேருந்து நிறுத்தமாக உள்ளது எனவே இந்த பகுதிக்கு உடனடியாக பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டிடம் கட்டித் தர பொதுமக்கள், சமூக ஆர்வலர் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.