கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன அதில் ஒன்று வால்பாறை சட்டமன்ற தொகுதியாகும் இந்த வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளது. வால்பாறை பகுதிக்கு உட்பட்ட பழைய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இன்று பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்து உள்ளது. கட்டிடத்தின் உள் பகுதி மது பிரியர்களின் பாராக மாறி உள்ளது கட்டிடத்தின் உட்பகுதி முழுவதும் காலி மது பாட்டில்களாலும் சிதறிய உணவுப்,
பொருட்கள் மற்றும் காலி தண்ணீர் பாட்டில்களாலும் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். சிதிலமடைந்து பயன்பாடற்று கிடக்கும் இந்த கட்டிடத்தை புதுப்பித்து,
பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் மாற்றி அமைக்கலாம் மேலும் கட்டிடத்தில் தையல் தொழில்நுட்ப பயிற்சி கல்விகள் அமைக்கலாம் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இரவு நேரங்களில் அப்பகுதியில் மது பிரியர்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.