கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகள் உள்ளன இந்த எஸ்டேட் பகுதியில் இருந்து வெளியூர் செல்ல வரும் பொதுமக்கள் வால்பாறைக்கு வந்து மற்ற பகுதிகளுக்கு செல்கின்றனர்.
ஆனால் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட காந்தி சிலை பேருந்து நிலையம் சரியான பராமரிப்பு மற்றும் போதிய இடவசதி இல்லாமல் இருப்பதால் இந்தப் பகுதிக்கு வந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
காலை மற்றும் மாலை நேரத்தில் பேருந்தில் ஏறிச் செல்வதற்கு சிரமப்படுகிறார்கள்.
பயணிகளை ஏற்ற வரும் பேருந்துகள் போதிய இட வசதி இன்றி ஒன்றன்பின் ஒன்றாக நின்றகிறது.
இதனால் பள்ளி மாணவர்கள் சிரமப்பட்டு ஏறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிலையத்தை விரிவு படுத்துவதற்கும் தொடர்ந்து பராமரிக்கவும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.