இந்தியாவிலே முதல் முதலாக மாணவச் செல்வங்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அமல்படுத்திய தமிழக முதல்வர் அவர்களுக்கு வால்பாறை வணிகர் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் வால்பாறை பகுதியில் நகராட்சியில் நிரந்தர ஆணையர் இல்லை இப்பகுதியில் வளர்ச்சிப் பணிகள் மிகவும் குறைவாகவே நடைபெறுகிறது தேவையில்லாத இடத்தில் பேருந்து நிலையத்தை கட்டுவதும் இருக்கும் பேருந்து நிலையத்தை இடித்து விட்டு மீண்டும் அதே இடத்தில் கட்டுவதாலும் பொதுமக்கள் மத்தியிலும் மிக அச்சத்தை ஏற்படுத்துகிறது மக்களின் வரி பணமும் வீணாகிறது பல வருடங்களாக நகராட்சி மூலம் மார்க்கெட் பகுதியில் கடை வாடகை தொழில்வரி ஜி எஸ் டி வரி போன்ற அரசுக்கு வருமானங்கள் வரும் வகையில் வாடகையும் வரியையும் செலுத்துகிறோம் ஆனால் மார்க்கெட் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை மேல் கூரை வழியாக மழை நீர் கசிந்து உள்ளே வருகிறது பராமரிப்பது நிலையில் நடைபாதைகளும் இயற்கை உபாதை கழிப்பதற்கு இலவசமாக எங்களுக்கு கழிப்பிட வசதிகளும் செய்து கொடுப்பதில்லை இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நேரில் சந்தித்து இந்த முன்னேற்றம் இல்லை இதை கருத்தில் கொண்டு இப்பகுதியில் நிரந்தர ஆணையர் நியமிக்க வேண்டும் என்று வால்பாறை வணிகர் தொகுதி செயலாளர் முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள குறிப்பிட்டுள்ளார் மேலும் அவர் கூறுகையில் வால்பாறை நகராட்சி பெயரளவுக்கு மட்டுமே உள்ளது நகராட்சியின் கட்டமைப்பு எதுவுமே இல்லை இதனால் இப்பகுதிகள் செயலதோட்ட தொழிலாளர்களும் பொதுமக்களும் வணிகர்களும் இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளும் மிகவும் வேதனை அடைகிறார்கள் தமிழக முதல்வர் செய்து தர வேண்டும் என்று அனைத்து தரப்பும் எதிர்பார்க்கிறார்கள் வேதனையோடு கூறினார்.
-P.பரமசிவம், வால்பாறை.