கோவை ஆர். எஸ் புரம் பகுதியைச் சேர்ந்த இந்திராணி. இவர் சூலூர் பகுதியில் வீடு கட்டுவதற்காக சில வருடங்களுக்கு முன்பு இடம் வாங்கி உள்ளார். மேலும் அதில் வீடு கட்டி தருவதாக கூறி ஏமாற்றிய மேஸ்திரி சித்திரைநாதன் என்பவருக்கும் இந்திராணிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் இதற்கு தீர்வு காண தமிழரசன் என்ற வழக்கறிஞரை இந்திராணி நாடிய நிலையில் தமிழரசன் தீர்வு கண்டு தருவதாக கூறியுள்ளார். மேலும் சித்திரைநாதனுக்கு ரூபாய் 3 லட்சத்து 30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று பணத்தை இந்திராணியிடம் தமிழரசனிடம் பெற்றுக் கொண்டு, பணத்தை சித்திரைநாதனிடம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் வழக்கறிஞர் தமிழரசன் தான் பொறியியல் படிப்பு படித்து உள்ளதாகவும் அந்த இடத்தில் வீடு கட்டி தருவதாக கூறி ரூபாய் 8 லட்சத்தி 70, 000 பணத்தை பெற்றுக் கொண்டு கட்டிடத்தின் பேஸ் மட்டம் வரை மட்டும் கட்டிவிட்டு நீங்கள் கொடுத்த பணத்திற்கு இவ்வளவு தான் கட்ட முடியும் என்றும் கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதுகுறித்து இந்திராணி கேட்டதற்கு கொலை செய்து விடுவதாக மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கறிஞர் சங்கத்தில் புகார் கூறியதாகவும், அதன் மீது விசாரணை நடத்திய தலைவர் மீதித் தொகையை திருப்பி வாங்கி தருவதாக கூறினார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை இல்லை என்று கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெனையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.