ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வு எழுதிய ஆசிரியை தேர்வறையில் இருந்து வெளியேற்றம்! திருவண்ணாமலையில் பரபரப்பு!
திருவண்ணாமலையில் இன்று நடந்த பாரத் இந்தி பிரசார சபாவின் இந்தி தேர்வில், ஹிஜாப் அணிந்த நிலையில் கலந்து கொண்டிருந்த அரபு ஆசிரியைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதோடு அவர் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் பாரத் இந்தி பிரசார சபாவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த சபாவின் சார்பில் ஆண்டுதோறும் 8 வகையான இந்தி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தான் பாரத் இந்தி பிரசார சபா சார்பில் இன்று இந்தி தேர்வுகள் நடந்தன. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் ஏராளமானோர் இந்தத் தேர்வை எழுதினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
திருவண்ணாமலை மாவட்டம், கோமாசிபாடி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியிலும் இந்த தேர்வு நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று இந்தி மொழித் தேர்வை எழுதினர். திருவண்ணாமலை கரிகாலன் தெருவை சேர்ந்த அரபு மொழி ஆசிரியையாகப் பணி புரிந்துவரும் ஷபானா என்பவரும் இந்தத் தேர்வை எழுத வந்தார். ஷபானா ஹிஜாப் அணிந்து வந்திருந்தார். அவர் தனது ஹால்டிக்கெட்டை காண்பித்து தேர்வறைக்கு சென்றார். அவருக்கு கேள்வித்தாள் வழங்கப்பட்டது. தேர்வும் தொடங்கிய நிலையில் 10 நிமிடங்கள் கழித்து ஹிஜாப்பை அகற்றும்படி ஷபானாவிடம் கூறியுள்ளனர். ஹிஜாப் அணிவதை நாங்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம் என ஷபானா கூறியுள்ளார். இதையடுத்து ஹிஜாப்பை கழற்ற மறுத்ததாகக் கூறி, அவர் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்தச் சம்பவம், அங்கு பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.
– ராயல் ஹமீது.