கப்பலோட்டிய தமிழன் வ.உ. சி அவர்களின் 152-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது திருஉருவச் சிலைக்கு அமுமக சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவபெருமாள் அவர்கள் தலைமையில் மரியாதை செலுத்தினார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் என்றாலே சுதந்திர போராட்ட தியாகிகள் நிறைந்த பகுதியாகும் குறிப்பாக ஓட்டப்பிடாரத்தில் வ.உ. சிதம்பரம் பிள்ளை பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் கவர்னர்கிரி மாமன்னன் சுந்தரலிங்கம் என தூத்துக்குடி மாவட்டம் இந்தியாவிலே அதிக சுதந்திரப் போராட்ட வீரர்கள் கொண்ட மாவட்டம் தூத்துக்குடியாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1872 செப்டம்பர் 5ம்தேதி ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி பிறந்தார். இவரது தந்தை பெயர் உலகநாதபிள்ளை, தாயார் பரமாயி அம்மையார். ஓட்டப்பிடாரத்தில் நடுத்தர கல்வியை முடித்த வ.உ.சி. தூத்துக்குடியில் உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற பின்னர் ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்தார். பின்னர் பிப்ரவரி 1894ம் ஆண்டில் திருச்சியில் சட்டக்கல்வி பயின்றார். 1900ல் தூத்துக்குடியில் வழக்கறிஞராகப் பணி தொடங்கினார்.
ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். வ.உ.சி. 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் ‘சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். டிசம்பர் 1906 ல் கப்பல்கள் வாங்குவதற்கு பம்பாய் சென்று திலகர் உதவியுடன் கப்பல்கள் வாங்கி வந்தார். எஸ்.எஸ். காலியோ, எஸ்.எஸ்.லாவோ ஆகிய கப்பல்கள் இயக்கப்பட்டன.
தனது சொந்த சொத்துக்களை எல்லாம் விற்று சிறை சென்று கடைசி காலத்தில் ஏழ்மையாக வாழ்ந்து மறைந்த தியாகி வ. உ. சிதம்பரம் அவர்களின் பிறந்தநாளை போற்றி வணங்குவதில் பெருமை கொள்கிறோம்.
இந்த பிறந்தநாள் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் P.கரன்சிங் செய்திருந்தார்.
இந்த விழாவில் மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பூலோக பாண்டியன், எம்.ஜி. ஆர் மன்ற துணைச் செயலாளர் செல்லதுரை பாண்டியன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஆனந்தப்பன், ராஜ்கபூர், முத்துக்குமார், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்டச் செயலாளர் கமலக்கண்ணன், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் உலகையா, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் சுப்பையா மற்றும் ஊராட்சிக் கழக கிளைக் கழக செயலாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.