இளம் பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட இருவர் கைது???
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதி அருகே அமைந்துள்ள இடுக்கி தங்கமணி என்னும் பகுதியில் கேலக்ஸி கேஸ் ஏஜென்சி நடத்தி வருபவரின் மகன்கள் சகோதரர்களான ஜெரின் மற்றும் ஜெபின் இருவரும் இளம் பெண்ணின் புகைப்படத்தை மார்பின் செய்து ஆபாச படமாக சித்தரித்து புதிய whatsapp குரூப் ஒன்று ஆரம்பித்து அதில் வெளியிட்டு பரப்பி உள்ளது தெரிய வந்தது.
இதன் காரணம் மூத்த மகனுடன் அவர் பழகியதாகவும் இவர்களுக்குள்ளே ஏற்பட்ட தகராறு காரணமாக இதை செய்துள்ளார். இதை தெரிந்து கொண்ட அந்த இளம்ப உடனடியாக இடுக்கி தங்கமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் நடவடிக்கை பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என காவல்துறை பகுதியில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணார்.