நாகர்கோவில் வடசேரி பகுதியில் சிஎஸ்ஐ கிறிஸ்தவ பேராயத்தின் நிர்வாகத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிக்கு வந்த மூன்று பேர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட நன்கொடை தருமாறு கேட்டனர். அப்போது நீங்கள் யார்? எதற்காக உங்களுக்கு எதற்கு பணம் தர வேண்டும் என்று பாலிடெக்னிக் நிர்வாகிகள் கேட்டனர். இதனால் அவர்களுக்கும், நன்கொடை கேட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதனிடையே அந்த வீடியோவில், நன்கொடை கேட்டவர்கள், தங்களை இந்து சேனா அமைப்பினர் என்று கூறுவதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் பணம் கேட்டு மிரட்டியது, இந்து சேனா நிர்வாகி பிரதீப் குமார், பிரதீஷ் மற்றும் மூர்த்தி என தெரியவந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “பிரதீப் குமார் என்பவர் ஏற்கெனவே ஓர் இந்து அமைப்பிலிருந்து பிரிந்து, தனியாக இந்து சேனா என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறார். அவர் விநாயகர் சதூர்த்தி விழா நடத்துவதற்காக நன்கொடை கலெக்ஷன் செய்வதற்காகச் சிலரை அழைத்திருக்கிறர். அதில், இந்துத்துவத்தில் ஈடுபாடுள்ள பிரதீஷைத் தன்னுடன் அழைத்திருக்கிறார். கூலி வேலைக்குச் செல்வதாகக் கூறிய பிரதீஷுக்குச் சம்பளம் தருவதாகக் கூறி அவரை அழைத்துச் சென்றதாகவும், சென்ற இடத்தில் பிரச்னை ஆனதால் இப்படிச் சிக்கிவிட்டதாகவும் தெரியவந்திருக்கிறது. தலைமறைவாக இருக்கும் மற்ற இருவரையும் தேடிவருகிறோம்” என்றனர்.
இந்நிலையில் பிரதீஷை (36) போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரித்த நீதிபதி அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். எனவே அவரை நாகர்கோவில் கிளை சிறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறைவாசலுக்கு சென்ற அவர், உள்ளே செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்து அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் அவரை சமாதானப் படுத்தி உள்ளே அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் சிறை முன்பு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் கல்லூரிக்கும் சென்று மிகப்பெரும் போக்கிரி போல பாவனை செய்து வசூலில் ஈடுபட்ட சிவசேனா நிர்வாகி, சிறைக்குள் செல்ல பயந்து அடம் பிடித்து கதறிய காட்சியானது பொதுமக்களிடையே நகைப்பை உண்டாக்கி உள்ளது.
-தமிழரசன், மேலூர்.