தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே தனியார் பள்ளியில் நேற்று மாலை பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ,சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளர் கடம்பூர்.செ.இராஜூ MLA.,அவர்கள் ஆலோசனை வழங்கினார்.
வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் இரண்டு கோடியே 50 லட்சம் உறுப்பினர்கள் என்ற இலக்கை அடைய பொதுச் செயலாளர் ஆணையிட்டுள்ளார். ஆளுங்கட்சி திமுக குட் கமிட்டி அமைப்பது ஆலோசனை வழங்குவது என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் மத்தியில் திமுகவிற்கு செல்வாக்கு இல்லை தகவல் தொழில் நுட்ப அணி தரும் கழக நிர்வாகிகளும் தொடர்ந்து செயல்பட்டு வெற்றிக்கு உழைக்க வேண்டும் என பேசினார்.
பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக பூத் கமிட்டி அமைத்தல் புதிய நிர்வாகிகள் நியமிப்பது போன்ற பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கடந்த 10. 9.2023 சென்னை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கினங்க
ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன் அவர்களின் தலைமையில் இந்த சிறப்பு பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சண்முகவேல் தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர், ஜவகர் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர், லட்சுமணன் கருங்குளம் ஒன்றிய செயலாளர், பேச்சியம்மாள் மாவட்ட கவுன்சிலர், ஆறுமுகசாமி புதியம்புத்தூர் நகர செயலாளர் மகாலட்சுமி பொதுக்குழு உறுப்பினர் கவியரசன் மற்றும் வீரபாண்டி அழகிரி என்ற கோபி உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.