தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே செவல்குளம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது , இதில் ஓட்டப்பிடாரம் உதவி காவல் ஆய்வாளர் முத்துராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதல் பரிசு கோப்பைகளை வழங்கினார்.
ஓட்டப்பிடாரம் செவல்குளம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டி நிறைவு பெற்றது . இதில் முதல் ஆறு இடங்களை பெற்று அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முதல் பரிசு புதூர் அணியினரும் , இரண்டாவது பரிசு செவல்குளம் அணியினரும் ,மூன்றாவது பரிசு கோவில்பட்டி அணியினரும் , நான்காவது பரிசு செவல்குளம் அணியினரும், ஐந்தாவது பரிசு பொட்டல்காடு அணியினரும், ஆறாவது பரிசு ஓட்டப்பிடாரம் காவல் நிலையம் அணி வெற்றி பெற்றது.
முதல் பரிசுக்கான கோப்பையை ஓட்டப்பிடாரம் காவல் நிலையை உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜா அவர்கள் வழங்கினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.