தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலை செல்லும் வழியில் தண்ணிர் லாரியும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது தலையில் இரத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒட்டப்பிடாரத்தில் இருந்து சரவணகுமார் 30 தகப்பனார் பெயர் பெருமாள் 2/94 நீராவி புதுப்பட்டி எட்டையபுரத்தை சார்ந்த இவர் தண்ணீர் லாரியை கீழமினாட்சிபுரம் அருகே இராமச்சந்திரபுரம் வந்த போது எதிரே வந்த பைக்கு மீது நேருக்கு நேராக மோதியதில் சிவகோவிந்தராஜ் வயது 35 தகப்பனார் பெயர் சிவத்தபாண்டி கீழமினாட்சிபுரம் சார்நத சிவகோவிந்தராஜ் பலத்த இரத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து விபத்து குறித்து தகவல் அறிந்த ஒட்டப்பிடாரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகோவிந்தராஜ் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஒட்டப்பிடாரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.