ஓட்டப்பிடாரம் சிவன் கோவில் 7 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அறிவுரையின்படியும் தூத்துக்குடி இணை ஆணையர் மண்டலம் சார்பாக ஓட்டப்பிடாரம் ஆய்வாளர் சரகத்த்தில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அமைந்துள்ளது. சிவன் கோவில் வைத்து நேற்று காலையில் இந்திரா நகர் குலசேகரநல்லூர் உட்பட ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் உள்ள 7 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் ஒரு இணை ஆணையர் மண்டலத்துக்கு 25 இணைகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 இணைகளுக்கு கோயில்களில் திருமணம் நடத்தப்படும்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூபாய் 50,000 மதிப்பிலான சீர்வரிசை திருமாங்கல்யம் 4 கிராம், மாலை, பீரோ, கட்டில், மெத்தை, தலையணைகள், பாய், , மிக்ஸி, சமையல் பாத்திரங்கள், பூஜைப் பொருட்கள் வழங்கப்பட்டது. 7 ஜோடிகளுக்கு ரூபாய் 3.50 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.
இந்த திருமண விழாவில் தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திரு. ம.அன்புமணி, ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் மற்றும் ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அவர்கள், அவைத்தலைவர் சுப்பிரமணியன், ஓட்டப்பிடாரம் சரக ஆய்வாளர் திருமதி முப்பிடாதி என்ற திவ்யா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
திருக்கோயில் அர்ச்சகர் விக்னேஷ் , திருக்கோயில், எழுத்தர் ஷண்முகராஜா மற்றும் பலர் மணமகன் மணமகள் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.