கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 14 மாவட்ட 1076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையில் ஒரு கோடி பனை விதை நடும் நெடும் திட்டத்தை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு நாட்டு நலப்பணித்திட்டம், கிரீன்நீட சுற்றுச் சூழல் அமைப்பு, தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள், ஒரு லட்சம் என்.எஸ்.எஸ் மாணவ மாணவிகள் , அரசுத்துறைகளின் ஒத்துழைப்போடு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி மேற்கொள்கிறது.
ஒரு கோடி பனை விதை நடவுப்பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 1ம் தேதி காலையில் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டதில் வேம்பார் தொடங்கி பெரியதாழை வரை 163.5 கி.மீ. தூர கடற்கரையில் 15 லட்சம் பனைவிதைகள் நடவு செய்யப்பட உள்ளது. அதற்கான கையேடு மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலரின் கடித நகல் ஆகியவற்றை தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவரும் , தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான எம்.ஏ.தாமோதரன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து எம்.எல்.ஏ. சண்முகையாவிடம் வழங்கினார்.
விளக்கக் கையேட்டினை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ சண்முகையா தருவைகுளத்தில் நடைபெறும் பனைவிதை நடவுத்திட்டத்தை துவக்கி வைக்க சம்மதம் தெரிவித்தார். மேலும் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறும் ஒரு கோடி பனை விதை நடவுத் திட்டத்திற்கு தேவையான முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றார்.
இந்த நிகழ்வின் போது உடன் யூனியன் சேர்மன் ரமேஷ் , திமுக நகரச் செயலாளர் பச்சைப்பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.