சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை ரோடு அருகில் அண்ணல் அம்பேத்கரின் முழு உருவச்சிலை உள்ளது. இச்சிலையானது கடந்த 1995-ஆம் ஆண்டு அன்றைய நகரசபை தலைவர் சித சிதம்பரம் அவர்களால் நிறுவப்பட்டது . காரைக்குடியை சுற்றியுள்ள சிங்கம்புணரி எஸ்.புதூர் திருப்பத்தூர் கல்லல் அமராவதிபுதூர் போன்ற பகுதிகளைச் சார்ந்த மக்களுக்கு மையமாக உள்ளதால் சமூக நீதி சார்ந்த நிகழ்வுகளுக்கு இங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவது வழக்கம்.
இச்சிலையானது அன்றைய இந்திய குடியரசு கட்சி தலைவர் அத்வாலே சார்பாக தேசிய எஸ்சி ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தின் பேரில், புட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைப்பதற்கு அப்போதைய நகர் மன்ற தலைவர் சித. சிதம்பரம் செட்டியார் அவர்களை நேரில் சந்தித்து கனரா வங்கி சந்திரன், க. கருப்பையா, குன்றக்குடி சுயமரியாதை சுப்பையா ஆகியோர் காரைக்குடி நகரில் எஸ்சி எஸ்டி பணியாளர்கள் நலச்சங்கம் சார்பாக,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
புரட்சியாளர் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும். எனவே அதற்கான இடத்தை தேர்வு செய்து வழங்க வேண்டும என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க உடனடியாக தற்போது சிலை அமைந்துள்ள முசாபரி பங்களா கமிஷனர் வீடு தென்புறம் காம்பவுண்ட் தற்போது உள்ள செக்காலை சாலையை ஒட்டி (தற்போது சிலை உள்ள) இடத்தை அவர் தேர்வு செய்து இதில் அம்பேத்கர் சிலை அமைக்கலாம் என்று சொல்லி கிழக்கு பக்கம் செக்காலை ரோடு பஸ்கள் செல்லும் ஆட்கள் நிற்க முடியாது மேற்கு பக்கம் நிறைய இடம் விழாவுக்கு வருபவர்கள் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வார்கள் நிற்பதற்கு வசதியாக இருக்கும் என்று சொல்லித்தான் அவர் இந்த இடத்தை தானமாக கொடுத்தார். மேலும் 1993 ஆம் ஆண்டு அக்டோபர் நான்காம் நாள் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு நகர சபை தலைவர் சிதம்பரம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளர் சி.சு.இளையகவுதமன் “தற்போது காரைக்குடி நகராட்சி அண்ணல் அம்பேத்கர் சிலை அருகே கடைகள் கட்ட ஏற்பாடு செய்து வருகிறது. அவ்வாறு வணிக கடைகள் கட்டப்பட்டால் அதன் மூலம் பொதுமக்கள் அந்த இடத்தில் நிற்பதற்கும் விழா காலங்களில் நிகழ்ச்சி நடத்துவதற்கும் இடையூறாக இருக்கும் என்றும், இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் சாதியவாதிகள் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் சூழ்நிலையில் சமூகநீதி பேசும் தமிழக அரசின் காரைக்குடி நகராட்சி நிர்வாகம் அம்பேத்கரின் திருவுருவட்சிலையை சிறுமைப்படுத்தும் நோக்கிலும் அதனை மறைக்கும் நோக்கிலும் ஈடுபடுவது வருத்தத்திற்குரிய மற்றும் கண்டனத்திற்குரிய செயலாகும்.
எனவே தெற்குபுற காம்பவுண்டு சுவர் சிலை அருகே கீழ்புறம் கடை கட்டுவதை நிறுத்தவும் ஏற்கனவே உள்ளபடி படிக்கட்டுகள் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம், அவரும் எங்களது கோரிக்கையை பரிசீலனை செய்து அதற்கான நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கின்றார்” என்று கூறினார்.
இந்நிலையில் காரைக்குடி நகரின் மையத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் சிலையானது ஏற்கனவே உள்ளது போல் எந்த வித புதிய கட்டுமான இடையூறும் இல்லாமல் மறைக்கப்படாமல் தொடர வேண்டும் என்பதே பொதுமக்கள் சமூக நீதியை பின்பற்றுபவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாக உள்ளது.
– தமிழரசன், மேலூர்.