சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் 308-வது பிறந்தநாள் விழா தென்காசியில் நேற்று கொண்டாடப்பட்டது. வெள்ளையர்களுக்கு எதிராக குரல் கொடுத்த சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ஆண்டுதோறும் தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
அவருடைய சிலைக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர் நேரில் சென்று மாலை அணிவிப்பார்கள் அங்கு போக முடியாதவர்கள் அவருடைய படத்துக்கு மாலையிட்டு மரியாதை செலுத்துவார்கள்.
கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் எதிரில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் 308வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் தலைமையில் நடைபெற்றது.
இந்த பிறந்த நாள் விழாவில் கோவில்பட்டி நகர தலைவர் சீனிவாசன் கோவில்பட்டி நகராட்சி கவுன்சிலர் விஜயகுமார் மாவட்ட பொதுச் செயலாளர் வேல்ராஜ் மாவட்ட துணை தலைவர் ராஜ்குமார் , சுரேஷ் குமார் மற்றும் முத்துமாரி உட்பட பலர் பூலித்தேவன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட தியாகிகளின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக சுதந்திர போராட்டத்தில் தென் மாவட்டங்களில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடியை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், மாமன்னன் சுந்தரலிங்கம், பாரதியார், வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன், ஒண்டிவீரன் என பல்வேறு வீரர்கள் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்க பல்வேறு போராட்டங்களில் தியாகங்களையும் செய்தனர்.
அந்த வரிசையில் இந்திய வரலாற்றில் முதன் முதலில் வெள்ளையனே வெளியேறு என்று வீர முழக்கமிட்டவர் மாமன்னர் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். இவரது 308-வது பிறந்தநாள் செப்டம்பர் 1-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.