தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் முதலியார் தெரு முன்பு அறிஞர் அண்ணா செங்குந்தர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக சமுதாய பொதுமக்கள் முன்னிலையில் அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற திமுக கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் 1967 மார்ச் 6இல் அமைந்த அமைச்சரவை இளைஞர்களைக் கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார்.
இரு மொழிச் சட்டங்களை தமிழ் மற்றும் ஆங்கிலம் உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை தமிழ் , இந்தி , ஆங்கிலம் முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்ற சென்னை மாகாணத்தை 1969 ஜனவரி 14 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்ற பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.