தூத்துக்குடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்.!!!
தூத்துக்குடி மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு இன்று காலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கங்களின் முக்கிய கோரிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள 4550 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் என்ற பெயரில் கூட்டுறவு கடன் சங்கங்களை பல்வேறு விதமான தேவையற்ற வாகனங்களை மற்றும் உபகரணங்கள் வாங்க கூறி கூட்டுறவுத் துறையினர் வற்புறுத்தி வருகின்றனர். விவசாய நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேவையற்ற இப்பணிகளை மேற்கொள்வதால் ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் உள்ள சங்கங்கள் மேலும் அழிவை நோக்கி செல்லும் அபாயம் உள்ளது.
தமிழக அரசு 2021 அறிவித்த விவசாய பயிர் கடன் நகை கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி தொகை முழுமையாக சங்கங்களுக்கு வராத நிலையில் 2021 முதல் அதற்குரிய வட்டியும் சங்கங்களுக்கு வழங்கவில்லை அதனால் சங்கங்கள் நஷ்டத்தில் சென்றுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த காலங்களில் ICDP, RIDF, AGRO , Services center போன்ற திட்டங்களால் கொள்முதல் செய்யப்பட்ட விவசாய உபகரணங்கள் கிடங்குகள் மூலம் சங்கத்திற்கு கிடைத்தது வெறும் கஷ்டம் மட்டுமே இதை அரசு அலுவலர்கள் கவனத்தில் கொள்ளாமல் கடந்த கால திட்டங்களை ரீமேக் செய்து MSC/AIF திட்டத்திலிருந்து செயல்படுத்த முனைகின்றனர்.
சங்க ஊழியர்கள் ஓய்வு பெரும் நாட்களில் இதில் ஏற்பட்ட இழப்பை காரணம் கூறி நிதி பலன்களை வழங்குவது நிறுத்தி வைப்பது தடுத்து நிறுத்த கோரியும் மேலும் இதற்கான அரசாணை வெளியிட வேண்டும், வாங்கும் உபகரணங்கள் அனைத்தும் அரசு மானத்தில் வழங்க வேண்டும் இதே நிலை தொடரும் பட்சத்தில் 03 10 2023 செவ்வாய்க்கிழமை சங்கங்கள் உள்ள விவசாய கருவிகள் அனைத்தையும் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு அலுவலக பணியாளர் அனைவரும் தொடர் விடுப்பில் செல்வது போன்ற போராட்டங்கள் தொடரும் என அறிவிக்கிறோம்.
இந்த இந்த போராட்டத்தில் மாவட்டத் தலைவர் ச.பாலமுருகன் கௌரவ பொதுச்செயலாளர் மா.ஜேசுராஜன் மாவட்ட பொருளாளர் செ. கணேசன் மாவட்ட துணை தலைவர் தம்பிராஜ் பெனிஷ்கர் ஒன்றிய நிர்வாகிகள் குமார், ஜவகர் கோபால் கென்னடி ஆறுமுகம் திருமணிதங்கம் ஆறுமுகபாண்டி நாகமணி குமரேசன் சுப்பையா ஜெபாஸ்டின் கணபதிமல்லு ஜெயக்குமார் மனோகர் கிருபாகரன் திருமணி ஸ்ரீதேவ் தமிழ்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் முனியசாமி.