தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமன் புனித வளன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது நாட்டு நலப்பணித் திட்டம் இன்று காலை நான்கு கிராமத்தில் நடைபெற்றது ஐவரம்பட்டி கிராமத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி சண்முகையா அவர்கள் தொடங்கி வைத்தார்.
புனித வளன் மேல்நிலைப்பள்ளி கீழ முடிமன் 2023 -24 எம் பள்ளியில் இயங்கக்கூடிய நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவை சங்கம், லசால் இளைஞர் இயக்கம், தேசிய பசுமை படை , சாலை பாதுகாப்பு, Scouts & Guides ஆகிய மாணவர்களால் ஐவரம்பட்டி, மலைப்பட்டி, பொட்டல் நகர், குமரட்டியாபுரம், ஆகிய கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு பேரணியும் கிராம தூய்மை ,கிராம மக்களை சந்திப்பு ஆகியவை நடைபெற்றது.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது இளைஞர்கள் செய்த . பெரும் தியாகங்களைப் போன்றே எதிர்காலத்திலும் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இளைஞர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட ஒரு சீரிய திட்டமே நாட்டு நலப்பணித் திட்டம்.
இந்நிகழ்வினை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா புளியம்பட்டி திருத்தல பேரலய அதிபர் மோட்சம் மற்றும் உதவி பங்கு தந்தை சந்தியாகு மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் தாளாளர் தலைமை ஆசிரியர் மற்றும் அருள் சகோதரர்கள் ஆசிரிய பெருமக்களால் துவங்கி வைத்து சிறப்பாக நடைபெற்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம் நிருபர்.