பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட நிகழ்ச்சி பொள்ளாச்சி ஏபிடி சாலையில் உள்ள நகர்மன்ற நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர மன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கே. முருகேசன் அவர்கள் தலைமை தாங்கினார். தொழிற்கல்வி ஆசிரியர் ஏ.குழந்தைவேல் முன்னிலை வகித்தார்.
பள்ளி திட்ட அலுவலர் எம் .முகமது காஜா முஹைதீன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் பொள்ளாச்சி அரிமா சங்கம் ஏ .ராஜசேகர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவரும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினருமான வெள்ளை நடராஜ் பொள்ளாச்சி சதுரங்க கழக செயலாளர் ஏ.பரமேஸ்வரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தனலட்சுமி ஆகியோர் மாணவர்களிடையே
தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு குறித்து உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என். எஸ் .எஸ் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் குப்பைகளை அகற்றியும் புல் புதர்களை அகற்றியும் மற்றும் அந்த சாலையில் உள்ள குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தியும் வீடு வீடாகச் சென்று பிளாஸ்டிக் கழிவுகளை பெற்றுக் கொண்டும் அது குறித்த விழிப்புணர்வு கருத்துக்களையும் பொதுமக்களிடையே வழங்கினார்.
இறுதியில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் புனிதன் அவர்கள் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.