பொள்ளாச்சி நேதாஜி ரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளிகளுக்கு அறிவித்த தமிழ்க்கூடல் இலக்கிய விழா நிகழ்வு நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை இரா.சித்ராதேவி அவர்கள் தலைமையில் தாங்கினார். தமிழ்க்கூடல் இலக்கிய நிகழ்ச்சியில் கவிஞர்கள் பொள்ளாச்சி முருகானந்தம், தமிழ் ஆசிரியர் ,பாலமுருகன் மற்றும் பள்ளி வளர்ச்சி குழு தலைவர் வெள்ளை நடராஜ், கவிஞர் முகமது இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளிடையே வாசிப்பு குறித்தும் இலக்கியம் குறித்தும் பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து பள்ளி மாணவிகளிடையே எழுத்து பயிற்சி, கவிதை பயிற்சி வழங்கி மாணவிகளை எழுத வைத்து அவர்களை பேச வைத்து இறுதியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு பொருட்களும் பட்டயமும் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பேசிய மாணவிகள் தங்களது கதை திறனையும் கவிதை திறனையும் அரங்கில் உடனடியாக பேசி பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது..
இறுதியில் பள்ளி தமிழாசிரியை அனிதா நன்றியுரை கூறினார்..
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.