நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. புதிய நாடாளுமன்றத்தில் முதல் பணியாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது
அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் லோக்சபாவில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றியதை கொண்டாடும் விதமாக வல்லநாடு பேருந்து நிறுத்தத்தில் 50 மகளிருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தோம். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட செயலாளர் வக்கீல் R.பிரபு தலைமையிலும் ஒன்றிய தலைவர் S.நங்கமுத்து முன்னிலையிலும் மாவட்ட நிர்வாகிகள் பேச்சி ,வசந்த், சீனிவாசன் ,தம்பான், முருகன், நயினார், பரமசிவம், ஒன்றிய நிர்வாகிகள் தம்பான், குமார், மணிகண்டன், ஜோதி, கிளைத் தலைவர்கள் மீனாட்சி சுந்தரம், மாரிமுத்து, கணேசன், பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.