கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை திவான்சாபுதூர் ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகருக்கு பிடித்த உணவுகள் பரிமாறப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு விநாயகரின் அருள் பெற்றனர்.
மேலும் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர் அணி இணைந்து
7-ஆம் விநாயகர் சதுர்த்தி விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி, விநாயகர் சதுர்த்தி விழாவை மூன்று நாட்களுக்கு கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக முதல் நாளான இன்று காலை 9 மணி அளவில் ஸ்ரீ விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மகா கணபதி ஹோமம் நடைபெற்றது பின்பு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொண்டு ஸ்ரீ விநாயகப் பெருமானின் அருள் பெற்றனர்.
இரண்டாவது நாளான நாளை செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளான நாளை மறுநாள் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது இதனைத் தொடர்ந்து விநாயகர் சிலை விதர்சனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா மக்கள் விழாவாக மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில் பக்தர்களுக்கு மூன்று நாட்களும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. முதல் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் பிறந்தநாள் தான் விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. அறிவு, ஞானம், கல்வி ஆகியவற்றுக்கான கடவுளாகவும், மேலும் எந்த விஷயத்தை முதலில் செய்தாலும் விநாயகரை வணங்கித்தான் செய்ய வேண்டும் என்ற ஐதீகமும் இன்று வரை தொடருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.