சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் 308-வது பிறந்தநாள் விழா தென்காசியில் நேற்று கொண்டாடப்பட்டது.
வெள்ளையர்களுக்கு எதிராக குரல் கொடுத்த சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆண்டுதோறும் தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
அவருடைய சிலைக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர் சென்று மாலை அணிவிப்பார்கள் அங்கு போக முடியாதவர்கள் அவருடைய படத்துக்கு மாலையிட்டு மரியாதை செலுத்துவார்கள்.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் நேற்று காலை திருநெல்வேலி இருந்து புறப்பட்டு தேவர்குளம் வந்தடைந்தார். அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் தென் மண்டல பொறுப்பாளர் கயத்தார் ஒன்றிய குழு தலைவர் கடம்பூர் இளைய ஜமீன்தார் மாணிக்கராஜ் அவர்கள் தலைமையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவபெருமாள் அவர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வழி நெடுகிலும் தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர், சுமார் 500க்கும் மேற்பட்ட வாகன அணி வகுப்புகளுடன் தலைவன் கோட்டையைச் சென்றடைந்தார், அங்கு நிறுவப்பட்டிருந்த முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் நெற்கட்டும்செவல் பூலித்தேவன் இல்லத்திற்கு ஊர்வலமாக சென்றார், அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.மாமன்னர் பூலித்தேவன் ஆண்ட காலத்தில் அவரை எதிர்த்து ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பீரங்கி இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அரண்மனை சிதிலமடைந்திருந்ததால் மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் தற்போது உள்ளார்.
அதைத் திரும்பப்பெற்ற இப்பகுதி அரண்மனைக்கு வந்து பூலித்தேவனின் புகழை உலகமெங்கும் தமிழ் மக்கள் அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூலித்தேவனின் வாரிசான கோமதி முத்துராணி துரைச்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.