யார் கெத்து.? பரிதாபமாக பலியான 21 வயது இளைஞர்…! கொடூர கொலையில் முடிந்த கோஷ்டி மோதல்.!

சிவகங்கை மாவட்டம் குமாரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் ஹரிஷ்(21), இவருக்கும் பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் முன்பிரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியில் வழக்கம்போல் இருதரப்பினரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் யார் கெத்து என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். ஹரிசும், அபிபாலனும் அந்த பகுதியில் நின்றிருந்தனர். அப்போது சில அடையாளம் தெரியாத நபர்கள் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தகராறு முற்றியதில் அவர்கள் கத்தி மற்றும் பீர் பாட்டில்களால் ஹரீசை சரமாரியாக வெட்டினர். இதில் நிலைகுலைந்த ஹரீஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

உடனிருந்த அபிபாலனையும் மர்ம நபர்கள் பீர்பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த பரமக்குடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு உயிருக்கு போராடி கொண்டிருந்த அபிபாலனை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஹரீஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அபிபாலன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சில நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அதனடிப்படையில் சில நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் இளைஞர் கத்தியால் குத்தி பீர்பாட்டிலால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரமக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நள்ளிரவு இளைஞர் ஹரிஸை சரமாரியாக வெட்டி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குற்றவாளிகளை கைது செய்யும் வரை ஹரிஸின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பாக மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தையை அடுத்து உடலை பெற்றுக் கொண்டனர். இளைஞரை கொடூரமாக வெட்டி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-தமிழரசன், மேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp