தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதி புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 17- கிராம ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் மூலமாக திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளுக்கு ரூ.42.50-லட்சம் மதிப்பீட்டில் மின்கல வண்டிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
இந்த விழாவில் நிகழ்வில் புதூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுசிலா தனஜெயன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல் உட்பட ஊராட்சி மன்றத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பூங்கோதை, விளாத்திகுளம்.