கோவை மலுமிச்சம்பட்டி போடிபாளையம் ரோட்டில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் ஒர்க்ஷாப் உள்ளது. இங்கு உத்தரபிரதேசத்தை சேர்ந்த வக்கீஸ் (வயது38), ரவி ஆகியோர் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். இந்த ஒர்க்ஷாப்பிற்கு கடந்த 29-ந் தேதி இரவு ஒரு டேங்கர் லாரி வந்தது. அந்த லாரியின் டிரைவர் லாரியில் வெல்டிங் செய்ய வேண்டும் என தெரிவித்தார். 30-ந் தேதி காலையில் வக்கீஸ் மற்றும் ரவி ஆகியோர் டேங்கர் லாரிக்குள் இறங்கி வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக டேங்கர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வக்கீஸ், ரவி ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த வக்கீஸ், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். ரவி பலத்த காயங்களுடன் மதுக்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.
வெல்டிங் வைக்கப்பட்ட லாரி பெட்ரோல், ஆயில் உள்ளிட்ட வேதிபொருட்களை ஏற்றி செல்லக்கூடிய லாரியாகும். வெல்டிங் பணிக்கு காலியாக தான் வந்துள்ளது. இருந்த போதிலும் வேதிபொருட்கள் ஏற்றிய லாரி என்பதால், வெல்டிங் வைக்கும் போது தீப்பொறி பட்டு இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.