கோவை, துடியலூர் அடுத்த, வீரபாண்டி பகுதியில், வன களப்பணியாளர்கள் ரோந்து பணியின்போது, காட்டு யானை ஒன்று படுத்துகிடப்பது கண்டறியபட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
யானை வனக்கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்யப்பட்டதில் அதன் வாயில் காயம் இருப்பது கண்டறியப்பட்டு அவுட்டுகாயால் காயம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவரால் சந்தேகிகக்கப்பட்டு தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வனக்குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைமேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் வனத்துறை மோப்ப நாய் உதவியுடன் களப் பணியாளர்கள் இணைந்து சந்தேகத்திற்கிடமான இடங்களில் சோதனை மேற்கொள்ளபட்டு வருகிறது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.