கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்தது பற்றி வால்பாறை மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி . பி நேதாஜி அவர்கள் கூறுகையில் அமைச்சர் வால்பாறைக்கு வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே அனைத்து இடங்களையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளும் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் அமைச்சர் வரும் பொழுது வால்பாறை பகுதி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும்படி ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் நகராட்சி திருமண மண்டப சாலை குண்டும் குழியுமாக இருந்த சாலைகளை அவசர காலத்தில் சரி செய்யப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் அரசு மருத்துவமனைகளிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வெளி ஊரிலிருந்து வரவழைக்கப்பட்ட வால்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதாகவும் மருத்துவமனையும் சுகாதாரமாக உள்ளது. இப்பகுதியில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கிறோம் என்று நம்ப வைத்து விட்டார்கள்.
இதை சுகாதாரத்துறை அமைச்சர் நம்பி விட்டார் அதைவிட காலையில் நடை நடைப்பயிற்சியின் போது அவருக்கு பாதுகாவலராக வனத்துறை அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் உடனிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள் அவரும் இப்பகுதியில் நான் பிறக்கவில்லை நான் நிரந்தரமாக குடி இருக்கவில்லை வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகள் மிகவும் இனிமையான பகுதி வால்பாறை என்று குறிப்பிட்டுள்ளார் அதை வரவேற்கிறோம்.
ஆனால் அமைச்சர் நடை பயணம் செய்த மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் நேரடியாக ஆய்வு செய்தார் அதே மனநிலை காலை மாலை மற்றும் இரவு நேரங்களில் மலைவாழ் மக்கள் போக்குவரத்து வசதி கூட இல்லாமல் வனவிலங்கு மத்தியில் எப்படி நடப்பார்கள் அங்கு என்ன நடக்கும் என்று அந்த சூழ்நிலையில் பயணித்தவருக்கு மட்டும் தான் தெரியும் இவர் வருகையினால் இவர் செல்லும் வழியில் சாலையின் இரு புறங்களும் செடிகள் அகண்ட மரங்கள் நெடுஞ்சாலை துறையினால் இரவோடு இரவாக அப்புறப்படுத்தி நாங்கள் இப்பகுதி மக்களுக்கு உதவுகிறோம் என்று நெடுஞ்சாலை துறையும் சொல்கிறது.
ஆனால் பகுதியில் இருக்கும் அடிப்படை பிரச்சனை சிங்கோனா அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 331 தினக்கூலியாக தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தினக்குலியாக 425 ரூபாய் வாங்குகிறார்கள். ஆனால் தமிழக அரசு அறிவித்த சம்பளம் தற்பொழுது 490 ரூபாய் மேல் கிடைக்க வேண்டும். வால்பாறை அரசு மருத்துவமனை தரமான சிகிச்சை இல்லை சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் வால்பாறையில் கார் பார்க்கிங் வசதி கிடையாது இதனால் வாகன விபத்தும் ஏற்படுகிறது சாலைகளில் இரு புறங்களும் செடிகள் மரங்களின் கிளைகள் வளர்ந்து இருப்பதால் வாகன ஓட்டுனர்களும் சிரமப்படுகின்றன.
எஸ்டேட் பகுதியில் உள்ள சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளது அரசு பள்ளிகள் சத்துணவு மையம் அங்கன்வாடி மையம் போன்றவை பழுதடைந்து பாதுகாப்பற்ற நிலையில் குழந்தைகள் பயில்கிறார்கள். அதே மாதிரி விளையாட்டு வீரர்களை ஊக்கி வைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க உள்ளது. ஆனால் வால்பாறை நகராட்சியால் நகராட்சி கால்பந்து மைதானத்தை சரி செய்து கொடுக்காமல். உபகரணங்களை வாங்கி கொடுக்காமலும் பலவேறு மனுக்கள் கொடுத்தும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் அதிகாரிகள்.
இதையெல்லாம் அமைச்சரிடம் பேசி விடுவார்கள் கோரிக்கை வைத்து விடுவார்கள் என்று தமிழக அரசால் அறிவிக்கப்படாத திராவிட முன்னேற்றக் கழகத்தின் இப்பகுதி மாவட்ட செயலாளரும் நகரச் செயலாளரும் அமைச்சர் முன் யாரையும் அனுமதிக்கவில்லை இதனால் எங்களுக்கும் இப்பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கும் பொது மக்களுக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் எதற்கு வந்தார் என்று புரியாத வண்ணமாக உள்ளது. இனி வால்பாறைக்கு வரும் அமைச்சர் பெருமக்களே பொதுமக்கள் தாங்கள் குறைகளை கேட்பதற்கும் அதை சரி செய்து தருவதற்கும் கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறோம்.
இன்னும் சொல்லப்போனால் இப்பகுதியில் இருக்கும் எங்கள தவிர எல்லா அரசியல் தலைவர்களும் நகராட்சியில் ஒப்பந்தம் எடுப்பதாலும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியத்தில் ஒப்பந்தத்தை போடுவதாலும் அமைச்சர்களை சந்திப்பது தவிப்பார்கள் இவர்களில் வருமானம் போய்விடும் என்று ஆனால் எங்கள் அமைப்பு மக்கள் நலனுக்காக வாழ்வாதாரத்துக்காக நேரம் காலம் பார்க்காமல் எதிர்பார்ப்பு இல்லாமல் செயல்படுவோம்.
இனிவரும் காலங்களில் இப்பகுதியில் இருக்கும் கட்சி நிர்வாகிகளோ அறிவிக்கப்படாத அமைச்சர்களோ சந்திப்பு சந்தித்து பொதுமக்கள் குறைகளை கூறுவதற்கு அனுமதிக்க வேண்டுமென்றும். பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கூட இப்பகுதி மக்களே நலனை சார்ந்ததாக கேள்வி பதில்கள் இல்லை இப்பொழுது நடந்தது போல் பல காரணங்களை காண்பித்து அமைச்சரே சந்திக்க விட முடியாமல் செய்த கட்சி நிர்வாகிகளை மக்களின் சார்பாக கண்டிக்கிறோம் என்றார்.
-P.பரமசிவம், வால்பாறை.