கோவை மாவட்டம் வால்பாறையில் வணிகர் சம்மேளனம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நகராட்சி அலுவலகம் முன்பு மாநில செயற்குழு உறுப்பினர் பி பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பரமசிவம் பேசுகையில் மக்கள் தொகை குறைவு மாற்றுத் தொழில் இல்லை வால்பாறை அருகே உள்ள நகரங்களை விரிவு படுத்தாமல் இப்பகுதி பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்காமல் அரசியல்வாதியுடன் இணைந்து அதிகாரிகளும் செயல்படுவதால் பல லட்ச ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகிறது.
வனத்துறையும் 6 மணிக்கு மேல் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காமல் சுற்றுலா பயணிகளை தடுக்கிறார்கள் பார்க்கும் இடங்கள் என்று சொல்லி பல இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை இருந்தாலும் கட்டண வசூலும் செய்கிறார்கள்.
இவர்களால் வால்பாறை மட்டும் எஸ்டேட் பகுதிகளில் மரங்களை வெட்டுவதற்கும் வன விலங்குகளை பாதுகாக்காமல் எஸ்டேட் பகுதிகளில் அடிக்கும் உயிர் கொல்லி மருந்தினால் பல வன விலங்குகள் உயிர்பலி ஏற்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள் எப்படி வனத்தை பாதுகாப்பார்கள். இதே மாதிரிதான் நெடுஞ்சாலை துறையும் நகராட்சித் துறையும் செயல்படுகிறது என்று பேசினார்.
அடுத்ததாக தலைவர் திரு பி தமிழ்ச்செல்வன் அவர்கள் பேசுகையில் தமிழகத்தில் பலவேறு இடங்களில் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சமூக முறையில் பேசி சரி செய்து இருக்கிறோம். ஒருகட்ட நேரத்தில் அரசும் எங்கள் அமைப்பின் மூலம் வழிகாட்டுதலும் கேட்பார்கள் நாங்களும் அவர்களோடு இணைந்து பலவேறு பிரச்சனைகளை தமிழகம் முழுவதும் செய்து இருக்கிறோம். ஆனால், வால்பாறை நகராட்சி தலைவரோ ஆணையரோ தனது சுயநலனுக்காக செயல்படுகிறார்கள் வால்பாறை வணிகர் சம்மேளனம் மூலம் பல வேறு கடிதங்கள் தபால் மூலமாக நேரடியாகவோ கொடுத்து வணிகர்களுக்கு அடிப்படை பிரச்சனைகளை செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்துகிறார்கள் அரசியல்வாதிகளுக்கு பயந்து ஆக்கிருப்புகளை அகற்றாமல் அவர்களிடம் தேவையானதை வாங்கிக்கொண்டு ஆக்கிரமிப்பு அரசியல்வாதிகளே பாதுகாத்துக் கொள்கிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் தமிழக அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு பஞ்சபடியுடன் ரூபாய் 490 வழங்க வேண்டும். அதுவும் வழங்கவில்லை நெடுஞ்சாலைத்துறையினால் சாலைகளின் இரு புறங்களில் இருக்கும் மரக்கிளைகளை வெட்டாமலும் வாகன விபத்து ஏற்படுவது வேடிக்கை பார்க்கிறார்கள் தேவையான இடங்களில் சாலைகள் போடாமல் குண்டும் குழியுமாக உள்ள எஸ்டேட் பகுதி ரோடுகளை பார்த்து சந்தோசம் அடைகிறார்கள் இவர்களுக்கு எதற்கு அரசு சம்பளம் அரசு வாகனம்.
எனவே இது தொடர்பாக சரி செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும் அதிகாரியிடமோ தமிழக முதல்வரிடமும் நேரடியாக பேசி வால்பாறை பகுதியில் இருக்கும் அனைத்து வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்போம் வால்பாறை ஐந்து அம்ச கோரிக்கை. வலியுறுத்தி தமிழக முழுவதும் நமது அமைப்பின் சார்பாக ஒரு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பேசினார்.
இக்கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ் மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளர் மாநில அமைப்பு செயலாளர் எஸ் கௌரி சங்கர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முடிவில் வால்பாறை அமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திரு விஸ்வநாதன் அவர்கள் நன்றி கூறினார்கள்.
இக்கூட்டத்தில் வால்பாறை அவைத் தலைவர் கோனார் மெடிக்கல் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொகுதி செயலாளர் சரவணன் அவர்கள் தொகுதி ஒருங்கிணைப்பாளர் பொன்மலர் செயலாளர்கே டி எம் மணிகண்டன் தலைவர் தலைவர் ரவீந்திரன் பொருளாளர் அழகன் என்கிற சிவா மற்றும் வால்பாறை நிர்வாகிகள் கலந்து கொண்டன மற்றும் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
-P.பரமசிவம், வால்பாறை.